Header Ads Widget

<

தமிழக அரசின் புதிய 3 திட்டங்கள் அறிவிப்பு -Tamilnadu Government New 3 Schemes




தமிழக அரசின் புதிய 3 திட்டங்கள் அறிவிப்பு 

அக்டோபர்மாதம் முதல் தமிழக அரசு புதிய திட்டங்கள்  வரவுள்ளன. இதில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் புரதசத்து நிரம்பிய செரியூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகின்றன. நகரும் ரேஷன் கடைகள், சூரிய ஒளியில் மின்சார ஆட்டோக்கள் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. 

1. ரேஷன் கடைகளில் செரியூட்டப்பட்ட சத்தான அரிசி:-

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாதர்களுக்கு தற்போது பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி வழங்கப்படுகின்றன. அந்த அரிசியில் மாவுசத்து மற்றும் புரத சத்துக்கள் உள்ளன. நாடு முழுவதுமுள்ள மக்களில் பலர் ஊட்டச்சத்து குறைபாடு   உள்ளவர்கள் இருக்கிறார்கள். இந்த ஊட்டச்சத்து குறைபாடால் அவர்களுக்கு ரத்த சோகை நோய் வருகிறது. இந்த போக்க மத்திய அரசு  முடிவு எடுதுள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் சத்துக்கள்  நிறைந்த வழங்க முடிவு  செய்தது. இந்த அரிசியில் போலிக் அமிலம் , வைட்டமின் பி 12, இரும்பு சத்துக்கள் உள்ளன . இந்த அரிசி முதல்கட்டமாக தமிழகத்தில்  திருச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் அமுலுக்கு வருகிறது. 

2. தமிழகத்தில் நகரும் ரேஷன் கடைகள் துவக்கம் :-

தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் எழுதில் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்குகிறார்கள். அனால் மலைவாசிகள், மற்றும் காட்டுப்பகுதிகளில் உள்ளவர்கள் ரேஷன் பொருள்களை வாங்குவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் நகரும் ரேஷன் கடைகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.  இதன் மூலம் பொருள்களை  குடும்ப அட்டைதாத்தார்கள் வீட்டிற்கே சென்று பொருள்களை விநியோகம் செய்யப்படும். இதன் மூலம் பல தரப்பட்ட மக்கள் பயனடைவார்கள். 

3. சூரிய சக்தியில்  இயங்கும் ஆட்டோக்கள் :-

தமிழகத்தில் பெட்ரோல் ஆட்டோக்களை சூரிய சக்தியில்  இயங்கும்  ஆட்டோக்களாக மாற்ற தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு சுமார் நூறு கோடி முதலீடு  செய்துள்ளது. இதனால் ஐயாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்திற்கு துபாய் நாட்டிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆட்டோக்கள் மின்சாரம் மற்றும் சூரிய ஒளியில் மட்டும் இயங்கும். தமிழக அரசு 13 வகையான இந்த புதிய ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.