Header Ads Widget

<

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 யாருக்கு கிடைக்கும் முழு விபரம் - RATION CARD KUDUMBA THALAIVI NEWS RS.1000

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும், யாருக்கு கிடைக்கும், எந்த ரேஷன் கார்டுக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்பது பற்றி தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.



தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. திமுக அரசு வெற்றி பெற்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். ஆனால் குடும்ப தலைவிக்கு ரூ.1000 திட்டம் நிறைவேற்றாமல் இருந்தது. இதனால் பல்வேறு கட்சி தலைவர்கள் உடனே இந்த திட்டத்தை நிறைவேற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கு தமிழக அரசு உண்மையான பயனாளிகளை கண்டறியப்பட்டு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், இந்த பணிகள் முடிவடைந்ததும் திட்டத்தை செயல்படுத்துவதாகவும் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த அறிக்கையை தயார் செய்யும் படி முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் 21500000 குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.25800 கோடி செலவாகும், இதனால் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் நிதி பற்றாக்குறை காரணமாக அனைத்து குடும்ப அட்டைக்கும் வழங்குவது இயலாத காரியம் ஆகும்.

இதனால் PHH, PHH-AAY, NPHH ஆகிய குறியீடுகள் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு மட்டும் உரிமை தொகையை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் NPHH-S, NPHH-NC  இந்த வகை ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கிடைக்கும் 

1. விதைவைகள் 

2.கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 

3.குழந்தை இல்லாதவர்கள் 

4.ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் 

யாருக்கெல்லாம் கிடைக்காது 

1. அரசு ஊழியர்கள் 

2.சொந்த வீடு வைத்திருப்பவர்கள் 

3. மாத வருமானம் பெறுபவர்கள் 

4.வருமான வரி செலுத்துபவர்கள் 

5. வசதி படைத்தவர்கள் 

இந்த திட்டத்தை வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் கட்டமாக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பொங்கலுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளதால் மகளிர் தினத்தன்று இந்த திட்டத்தை செயல்படுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தகுதியுள்ள பயனாளர்களை கண்டறிந்து திட்டத்தை விரிவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

60 வயதிலும் நரைமுடி கறுப்பாகும் அதிசயம்