துலாம் : துலாம் ராசி அன்பர்களே! ஜனவரி மாதம் 17ம் தேதி 2023 முதல் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்ய போகிறார். இதுநாள் வரை ஆட்டிவைத்த அர்த்தாஷ்டம சனி முடியப்போகிறது. உங்களுக்கு புண்ணிய சனி தொடங்கப்போவதால் இதுநாள் வரை இருந்த தடைகள் நீங்கி பல நன்மைகளை பெறுவீர்கள். முன் ஜென்ம புண்ணியங்கள் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. பூர்வ புண்ணிய சனியால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகம், குதூகலம் அதிகரிக்கும். சனியின் பார்வை மேஷத்தில் இருப்பதால் கணவன், மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் காலம் நிம்மதியாக இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். நீண்ட நாள் இருந்த தடைகள் நீங்கி கனவுகள் நனவாகும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சனியின் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் உங்கள் அறிவு, திறமை, வளர்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல அனுகூலம் கிடைக்கும். குடும்பத்திற்காக சேமிக்க முயற்சி செய்வீர்கள். காதலிப்பவர்களுக்கு காதல் கைகூடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு உள்ளது. வீடு மனை வாங்குவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு நகை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான திட்டங்களுக்கு முதலீடு செய்வீர்கள். குழந்தைகளுக்கு சில உடல் உபாதைகள் வரலாம், ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
உங்களுடைய தொழில் ஸ்தானத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கூட்டு தொழில் சிறப்பாக இருக்கும். மக்கள் தொடர்பில் இருக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு செய்ய வேண்டாம். ரேஸ், லாட்டரி, சூதாட்டம், கிளப் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. உங்கள் உழைப்பின் மூலம் மற்றவர்கள் ஆதாயம் பெறுவார்கள். பணம் பொருள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் சுறுசுறுப்பாக இருந்தாலும், அலைச்சல்களால் உடல் சோர்வு, அசதி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமான உணவுகளை விரும்புவீர்கள்.
பரிகாரம் : திருநள்ளாறு சென்று நளதீர்த்ததில் நீராடி சனி பகவானை தரிசனம் செய்து வர அதிக நன்மைகள் உண்டாகும்.