மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் உங்களுக்கு பல வழிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்கு புதாத்திய யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் நன்றாக இருக்கும். இந்த மாதம் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரலாம். மாணவர்களுக்கு கல்வித்தரம் உயரும். அக்டோபர் மாதம் குடும்ப வாழ்க்கையில் கலவையான பலன்களை தரும். காதலிப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். காதல் கைகூடும். திருமணமான தம்பதிகளுக்கு இந்த மாதம் சுமாராக இருக்கும். பணவரவு ஏற்றம் இறக்கமாக இருக்கும். குடும்பத்தின் சுப நிகழ்ச்சிக்காக பணத்தை செலவிட வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையின் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை அக்டோபர் மாதம் சுமாராக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில உடல் உபாதைகள் வந்து போகும்.
மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடும். தொழில் நல்ல பலன்களை தரும் மாதமாக அமையும். ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் மந்தமான நிலை உருவாகலாம், ஆகையால் படிப்பில் கவனம் தேவை. காதல் வாழ்க்கையில் கலவையான பலன்களை தரும். திருமணமானவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அக்டோபர் மாதம் பொருளாதாரம் ஏற்ற தாழ்வாக இருக்கும். சில நேரங்களில் குழப்பமான சிந்தனைகள் வரும். எதையும் மனதில் நினைத்து குழப்பமடைவதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வந்து போகும்.
கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்தவையாக இருக்கும். அரசு துறை சார்ந்த தொழில்கள் நல்ல பலன் கிடைக்கும். அரசாங்க ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை பொறுத்தவரை இந்த மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்தவையாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து போகும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் உங்களின் தொழில் மற்றும் வியாபாரம் கலவையான பலன்களை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வித்திறன்மேம்படும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். இந்த மாதம் காதல் மற்றும் திருமண வாழ்வில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவை பெறுவீர்கள். இந்த மாதம் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வந்து போகும். உடல் நலனில் கவனம் தேவை.
கன்னி : (KANNI) கன்னி ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களை அடைவீர்கள். உங்கள் கடின உழைப்பால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். சில நேரங்களில் சில குழப்பங்கள் வந்து போகும். தேவையற்ற எண்ணங்களை தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கை சுமாராக இருக்கும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், ஆகையால் பொறுமையாக இருப்பது உத்தமம். காதம் மற்றும் திருமண வாழ்வில் கலவையான பலன்களை தரும். பணவரவுகள் ஏற்றம் இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் தொழில் ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெரும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். மாணவர்களின் கல்வித்திறன் உயரும். வெளிநாடு சென்று படிக்க விரும்புவர்களுக்கு ஏற்ற மாதம் ஆகும். அரசு மற்றும் போட்டி தேர்வுகளில் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். வாழ்க்கைத் துணையிடம் நல்ல பரஸ்பரம் உண்டாகும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சாதகமான சூழல் உருவாகும். பணவரவுகள் ஏற்றம் இறுக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வந்து போகும்.
விருச்சிகம் : (VIRUCHIGAM) விருச்சிக ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும். புதிய தொழில் தொடங்குவதில் நன்மைகளை தரும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை பொறுத்தவரை இந்த மாதம் சாதகமான பலன்களை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உற்சாகம் காணப்படும். காதல் வாழ்க்கை கைகூடும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த மாதம் சில உடல் உபாதைகள் வரும். உடல் நலனில் அக்கறை தேவை.
தனுசு : (DHANUSU) தனுசு ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த மாதம் மாணவர்களின் கல்வியில் கலவையான பலன்களை தரும். படிப்பில் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்வில் சற்று ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பண முதலீடு போன்றவற்றில் கவனம் தேவை. எதையும் யோசித்து செய்வது நல்லது. பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில பிரச்சனைகள் வரலாம். உடல் நலனில் கவனம் தேவை.
மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் தொழில் மற்றும் வியாபாரம் கலவையான பலன்களை தரும். கல்வி துறையில் நல்ல வாய்ப்புகள் வரும். உங்களின் கடின உழைப்பால் நல்ல பலன்களை பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவை பெறுவீர்கள். காதல் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும். கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் வந்து போகும். வாழ்க்கை துணையுடன் பேசும் போது கவனம் தேவை. இந்த மாதம் பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அஜீரணம், தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
கும்பம் : (KUMBAM) கும்ப ராசி ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் தொழில் துறையில் பல புதிய கவர்ச்சிகரமான வாய்ப்புகள் வரும். நிலம் மற்றும் சொத்துக்களை வாங்க யோகம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான பலன்களை தரும். கல்வித்துறையில் சில அதிர்ஷ்டமான வாய்ப்புகள் வரும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை சாதகமான பலன்கள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்வில் இந்த மாதம் இனிமையாக இருக்கும். கணவன், மனைவி உறவு மேம்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை தலைவலி, கண், சுவாச பிரச்சனைகள் வரலாம். உடல் நலனில் கவனம் தேவை.
மீனம் : (MEENAM) மீன ராசி அன்பர்களே! அக்டோபர் மாதம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கல்வித் துறையில் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். படிப்பில் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை சுமாராக இருக்கும். கணவன், மனைவி இடையே சில பிரச்சனைகள் வந்து போகும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். காதல் மற்றும் திருமண வாழ்வில் கலவையான பலன்களை தரும். எந்த விஷயத்தையும் யோசித்து செய்யவும். பணவரவுகள் ஏற்றம் இறக்கமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் வரலாம். உடல் நலனில் அக்கறை தேவை.