Header Ads Widget

<

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2000 வெளியான தகவல் - TAMILNADU RATION CARD PONGAL GIFT RS.2000



தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ரேஷன் அட்டைதாதர்களுக்கும் மற்றும் இலங்கை மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். 

கடந்த ஆண்டு வழங்கிய பொங்கல்  தொகுப்பாக 14 பொருள்கள் வழங்கப்பட்டது. இதை வாங்கிய ரேஷன் அட்டைதாரர்களில் பலருக்கு முந்திரி, பருப்பு போன்ற  சில பொருள்கள் காணவில்லை என்று புகார்கள்  எழுந்தன.  இதனால்  இந்த ஆண்டு இவ்வாறு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருகிறது.  வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்கள் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை பெற்ற பிறகு ஏதேனும்  பொருள்கள் விடுபட்டுள்ளது தெரிந்தால் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டு (04522531286) என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ரேஷன்  கடைகளுக்கு  அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன அதன்படி;

*குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கபணம் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும்.

*எந்த காரணத்தை கொண்டும் பொருள்கள் இருப்பு இல்லை என்று திருப்பி அனுப்பிவிடக்கூடாது.

*முதியோர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

*ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறக்க வேண்டும். 

*எந்தவித புகாரும் இன்றி பொருள்கள் விநியோகம் செய்வதை உறுதி செய்யவேண்டும்.

*பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டவுடன் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வருகிற பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புடன் கூடிய ரொக்கப்பணம் வழங்கும் என்று அறிவிப்பு வெளியானதையடுத்து எவ்வளவு தொகை வழங்கும் என்று ஒரு சில  நாட்களில் அறிவிக்கும் என கூறப்படுகிறது.