பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது. பசுமை வீடு திட்டம் என்பது வீடு இல்லாமல் நிலம் மட்டும் வைத்திருக்கும் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நபர்களுக்கு இலவசமாக கட்டி தரும் வீடு பசுமை வீடு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். கட்டுமான வசதி கொண்ட சூரிய மின்சக்தி மற்றும் சோலார் வீடு தமிழக அரசு வழங்குகிறது. வீடு கட்ட ஆகும் செலவு என்று பார்த்தல் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையும் ஆகலாம். இந்த கணக்கீடுகள் எல்லாம் நீங்கள் உங்கள் பசுமை வீட்டை கட்டுவது பொறுத்தே ஆகும். சுமார் 300 சதுர அடி கொண்ட இடங்களில்தான் வீடு கட்ட வேண்டும். அதற்குமேல் குறைவாகவோ அதிகமாகவோ இருத்தல் கூடாது. வேண்டுமென்றால் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு மேல் மேற்கொண்டு பணம் போட்டு வீட்டை மேம்படுத்தலாம். தமிழக அரசு கட்டுமான கட்டிடங்களுக்கு ரூ.1800000 முதல் ரூ.2100000 வரை வழங்குகிறது. சூரிய மின்சக்திக்கு ரூ.30000 வழங்குகிறது. இந்த நிலையில் புதிய அறிவிப்பாக "தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்த சொந்தமாக வீடு இல்லாத தொழிலாளர்கள், வீட்டு மனை வைத்திருந்தால், அவர்கள் சுயமாக வீடு கட்டிக்கொள்ள ரூ.400000 நிதி உதவி வழங்கப்படும். அல்லது சொந்த வீட்டுமனை இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் வகையில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது." நல வாரியத்தில் பதிவு செய்த தகுதியுள்ள கட்டுமான தொழிலாளர்கள், tnuwwb.tn.gov.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.