Header Ads Widget

<

காடை முட்டையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் - Quail egg benefits in tamil






 காடை முட்டையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களை இங்கு பார்ப்போம் :-

நம் அன்றாட உணவுகளில் புரதச்சத்து மிகவும் அவசியம். புரதச் சத்து நிறைந்த உணவுகளில் கோழி முட்டை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. நம் அன்றாட உணவுகளில் சத்துக்கள் நிறைந்த உணவு சேர்த்துக் கொள்வது அவசியமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் குறைந்த விலையில் எளிமையான முறையிலும் சமைக்கவும் புரதச்சத்து நிறைந்த உணவாக முட்டை பயன்படுகிறது.என்னதான் கோழி முட்டையில் புரதச் சத்துக்கள் இருந்தாலும், காடை முட்டையில் அதைவிட சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் புரோட்டீன்கள் விட்டமின்கள் நம் உடம்பிற்குத் தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றின் மருத்துவ பயன்களும் முக்கியத்துவம் பெருகின்றன.


  • காடை முட்டையை உண்பதால் நம் உடலில் ஏற்படக்கூடிய அலர்ஜி, ஒவ்வாமை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

  • காடை முட்டையை உண்பதால் நம் மூளையின் செயல்பாட்டை தூண்டி நமக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

  • காடை முட்டையை உண்பதால் நம் நரம்பு மண்டலத்தை ஆக வைத்துக்கொள்கிறது.

  • காடை முட்டையை உண்பதால் நமக்குத் தெரியாமல் வரக்கூடிய புற்றுநோயை கூட வராமல் தடுக்கிறது.

  • புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் காடை முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் நாளடைவில் குணமாகக் கூடும்.

  • நம் உடலில் உள்ள செரிமான பாதையில் ஏதேனும் காயங்கள் மற்றும் புண்கள் இருந்தால் அவற்றை குணப்படுத்தும் தன்னை உள்ளது.

  • நம் உடலில் உள்ள பித்தக் கற்கள் சிறுநீரகக் கற்கள் ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றுகிறது.

  • நம் உடலில் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் ஆகியவற்றை நீக்கி உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

  • காடை முட்டை நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து ஆஸ்துமா, நீரழிவு நோய், காசநோய், புற்றுநோய், மூச்சுக்குழாய் ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. கோழி முட்டையை விட காடை முட்டையில் அளவுக்கதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன.