Header Ads Widget

<

தீபாவளி முன்னிட்டு தமிழக ரேஷன் அட்டைக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு - RATION CARD DIWALI GIFT NEWS RS.2000

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் அட்டைக்கு சிறப்பு சலுகைகள்  மற்றும் ரேஷன் கடைகளுக்கு சில அதிரடி உத்தரவுகளை தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை காலங்களில் இலவச பரிசு பொருள்கள் மற்றும் உதவி தொகை வழங்கப்படுவது வழக்கம். கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.4000 நிதியுதவி மற்றும் மளிகை பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த திட்டம் தமிழக மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெரும் வகையில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைளை கொண்டு வந்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருள்களை முன்கூட்டியே வழங்க ரேஷன் கடைகளுக்கு ஆணையிட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ரேஷன் கடைகளை காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்கு தடையின்றி பொருள்களை வழங்கவும் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்கும் போது ரேஷன் கடை ஊழியர்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் அலைக்கழிக்க கூடாது எனவும், மரியாதையுடன் நடந்து கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடைகளில் பனைவெல்லம் விற்பனை திட்டத்தை முதல்வர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்துள்ளார். மேலும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்தறி பட்டுப் புடவைகளையும் முதல்வர் அறிமுகபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயித்துள்ளது. இதனை மீறி வெடிப்பவர்களுக்கு  வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ரயில் மற்றும் பேருந்துகளில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் பிடிபடுவோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைகளுக்கு மகிழ்ச்சியான அதிரடி அறிவிப்பு