சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 அற்புத யோகம் பெரும் ராசிகள் - SANI PEYARCHI PALANGAL 2023

Header Ads Widget

<

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 அற்புத யோகம் பெரும் ராசிகள் - SANI PEYARCHI PALANGAL 2023


சனிப்பெயர்ச்சி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழப்போகிறது. இதனால் எந்தந்த ராசிக்காரர்களுக்கு சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கைபோகிறது. எந்தந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம். "சனிப்பெயர்ச்சி 2023 ஜனவரி மாதம் 17ம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும், 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழும் இந்த சனிப்பெயர்ச்சி 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.

எந்த ராசிக்கு ராஜயோகம் 

கும்ப ராசிக்கு செல்லப்போகும் சனிபகவானால் அதிக ராஜயோகத்தை பெறப்போவது மேஷ ராசிக்காரர்கள்தான். 

மேஷ ராசிக்கு 11ம் வீட்டிற்கு வருவதால் இவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும். முதலீடுகளில் லாபம் இரட்டிப்பாகும். எதையும் துணித்து செய்யலாம். 

ரிஷப ராசிகாரர்களுக்கு பத்தாம் ராசிக்கு சனி வருவது யோகமான இடம் ஆகும். புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் அதிக லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

துன்பம் விலகி நன்மை கிடைக்கும் ராசி 

மிதுனம் ராசிக்காரர்கள் கடந்த காலங்களில் கவலைப்பட்டு இருந்திருப்பீர்கள். கடுமையான மன அழுத்தம், பொருள் இழப்பு, வேலைப்பளு, நோய் என பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பீர்கள். இந்த சனிப்பெயற்சியால் துன்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். மனதில் நிம்மதி பிறக்கும். நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள், தடைகள் முடிவுக்கு வரும். சனிபகவான் பல வகையில் நன்மைகளை தருவார். 

அஷ்டம சனி கண்டச்சனி 

கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி ஆரம்பிக்கிறது. எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை. பணத்தை கையாள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் மற்றும் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பண இழப்பு, பொருள் இழப்பு ஆகியவை சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

சிம்மராசிகாரர்களுக்கு சனிபகவான் ஏழாம் வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரலாம். ஆகவே பொறுமையாகவும்  கவனமாகவும்  இருப்பது அவசியம்.

குதூகலம் பெரும் ராசிகள் 

கன்னி ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டிற்கு வரப்போகும் சனிபகவானால் கடன், எதிரி, நோய் பிரச்சனைகள் நீங்கும். வராக்கடன்கள் வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி விலகுவது மிகப்பெரிய யோகம். பல பிரச்சனைகளிலிருந்து விடுபடுவார்கள். தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி என்றாலும் பெரிய அளவில் கஷடம் இருக்காது. எதையும் சமாளிப்பார்கள். பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகள் ஏற்படும்.

விடுதலைபெறும் ராசிகள் 

தனுசு ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்த பாதிப்புகளிலிருந்து விடுதலை கிடைக்கும். மனதில் நிம்மதி பிறக்கும். 

மகர ராசிக்காரர்கள் ஜென்மச்சனியிலிருந்து விடுபட்டு, தொல்லைகள் போய்விடும். நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். 

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் 

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனி ஆரம்பிக்கிறது. எந்த செயலிலும் கவனம் தேவை. இருக்கிற வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு முயற்சிக்க வேண்டாம். மன அழுத்தம், குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம் புத்திர பாக்கியம் உண்டு.

மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. முதல் சுற்றில் இருப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் மூலம் பாடம் கற்க நேரிடும். எதிலும் பொறுமையாக இருப்பது  நல்லது. 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொருளாதார வளம் அதிகமாகும். திடீர் செலவுகள் வரும்.

பரிகாரங்கள் 

பாதிப்புகள் ஏற்படும் ராசிக்காரர்கள் திருநள்ளாறு சென்று சனிபகவானை வணங்கவும். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கவும். சனி பகவானின் வாகனமான காக்கைக்கு உணவு படைக்கவும். இவ்வாறு செய்தால் தீமைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.