தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிய மாற்றம் -TAMILNADU SCHOOL REOPEN NEWS

Header Ads Widget

<

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிய மாற்றம் -TAMILNADU SCHOOL REOPEN NEWS

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிய மாற்றம் 






தமிழகத்தில் கொரோன தொற்று காரணமாக கடந்த 16 மாதங்களை பள்ளிகள் திறக்க வில்லை. இந்த கால கட்டத்தில் மாணவர்களுக்கு வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கொரோனவை கட்டுப்படுவதில் தமிழக அரசு தீவிரம் காட்டியதால். தற்போது தமிழகம் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு தமிழகத்தில் பள்ளிகளை திறக்க முதல்வரிடம் ஒப்புதல் பெற்று வருகிற செப்டம்பர் 1 முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்ய பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கும் பொது வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக கொரோன தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அதற்கான சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உதிரவிட்டுள்ளனர். கொரோன தடுப்பூசிக்கன சான்றிதழ் கொண்டு வராவிட்டால் பள்ளிகள் திறக்க கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அண்டை மாநிலமான ஆந்திர கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு காரோண பரிசோதனை மேற்கொண்டதில் பல மாணவர்களு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் பள்ளிகளை திறக்க முடிவு செய்திருப்பதால். கழகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர் கூறுகையில் தமிழகத்தில் ஒரேயடியாக பள்ளிகளை திறக்காமல் எதிர்ப்பு சக்தி உள்ள மாவட்டங்களில் மட்டும் முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டு அதன் நிலைமையை கருத்தில் கொண்டு பிறகு படி படியாக பள்ளிகளை திறக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

அண்டை மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோன தொற்று பரவி வருவதால் தற்போது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி போடலாம் என்று சில பெற்றோர்கள் கருது தெரிவித்துள்ளனர். ஆகையால் தமிழக அரசு இது பற்றி கலந்தாலோசித்து விரைவில் பள்ளிகள் எப்போது திறக்கலாம் என்று அறிவிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.