Header Ads Widget

<

வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் தமிழக அரசு அறிவிப்பு - TAMILNADU PASUMAI VEEDU THITTAM LATEST NEWS



தமிழக அரசு வீடு கட்டுவதற்கு மானியமாக ரூ.4 லட்சம் அறிவித்துள்ளது. இந்த தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம். 

பசுமை வீடு திட்டம் : பசுமை வீடு திட்டம் என்பது வீடு இல்லாமல் நிலம் வைத்திருக்கும் நபர்களுக்கு  இலவசமாக கட்டி தரும் வீடு பசுமை வீடு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். கட்டுமான வசதி கொண்ட சூரிய மின்சக்தி மற்றும் சோலார் வீடுகளை  தமிழக அரசு வழங்குகிறது. வீடு கட்ட ஆகும் செலவு என்று பார்த்தால் 5 லட்சம் முதல் பத்துலட்சம் வரை ஆகலாம். இந்த கணக்கீடுகள் எல்லாம் நீங்கள் பசுமை வீடு கட்டுவதை பொறுத்தே ஆகும். 300 சதுர அடி கொண்ட இடங்களில் தான் வீடு கட்ட வேண்டும். அதற்கு மேல் குறைவாகவோ அதிகமாகவோ இருத்தல் கூடாது.  வேண்டுமென்றால் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு மேல் வீட்டை மேம்படுத்தலாம். பட்டா பாத்திரம் ஆகியவை எல்லாம் ஒரே பெயரில் இருக்க வேண்டும். எந்த ஒரு வில்லங்கமும் இருக்க கூடாது. தமிழக அரசு கட்டுமானத்திற்கு ரூ.180000 லிருந்து 210000 வரை வழங்குகிறது. சூரிய மின்சக்திக்கு 30000 வழங்குகிறது.  இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் சொந்த ஊரில் உள்ள பஞ்சாயத் அலுவலகத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும். வீடு கட்டுவதற்கு கம்பி 350 கிலோவும், சிமெண்ட் மூட்டை 150 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய அறிவிப்பாக, தமிழக கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்த சொந்தமாக வீடு இல்லாத தொழிலாளர்கள், வீட்டு மனை வைத்திருந்தால், அவர்கள் சுயமாக வீடு கட்டி கொள்ள ரூ.400000 நிதி உதவி வழங்கப்படும் அல்லது சொந்தமாக வீட்டுமனை இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு நரகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் வகையில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்த தகுதியுள்ள கட்டுமான  தொழிலாளர்கள், tnuwwb.tn.gov.in  என்கிற இணையதளம் வாயிலாக  விண்ணப்பித்து இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.