Header Ads Widget

<

தளபதி 67 படத்தில் புதிய ட்விஸ்ட் - ACTOR VIJAY THALAPATHY 67 MOVIE LATEST NEWS TODAY

தளபதி 67 திரைப்படத்தில் புதிய திருப்புமுனையாக முக்கிய நடிகர் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்,  போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருகிறார். இவர் இயக்கிய விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் நல்ல வசூலை பெற்று தந்துள்ளது. தற்போது இவர் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்கவிருக்கிறார். மாஸ்டர் படம் வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைகிறது. லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் விஜய்யின் 67வது படம் மாபெரும் வெற்றி பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தளபதி 67 படத்தில் த்ரிஷா, அர்ஜுன், பிரிதிவிராஜ், சஞ்சய்தத், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் முக்கிய வேடத்தில் தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜூனா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தளபதி 67 படம் விஜய் ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.