செப்டம்பர் மாதம் கன்னி ராசிக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம் - SEPTEMBER MONTH RASI PALAN KANNI 2022

Header Ads Widget

<

செப்டம்பர் மாதம் கன்னி ராசிக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம் - SEPTEMBER MONTH RASI PALAN KANNI 2022


கன்னி : கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன் சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. இட மாற்றம் உண்டாகும். இந்த மாதம் பிற்பகுதியில் சூரியனும் இணையப்போவதால் புதாத்திய யோகம் உங்களுக்கு கிடைக்கும். செவ்வாய் பகவான் பாக்ய ஸ்தானத்தில் இருப்பதால் நன்மைகள் நடைபெறும். சில நேரங்களில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நல்ல வேலையில் இருப்பவர்கள் அதே இடத்தில பணிபுரிவது நல்லது. புதிய வேலை வேண்டி, இருந்த வேலையை மாற்றம் செய்ய வேண்டாம்.

இந்த மாதம் குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை இதுநாள் வரை இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சுக்கிரன் சூரியனுடன் மாத முற்பகுதியில் இருப்பதால் திருமண முயற்சிகள் கைகூடி வரும். உங்களுக்கு குரு பார்வை இருப்பதால் திருமண யோகம் கைகூடி வரும். திருமணத்திற்காக வரன் பார்க்கலாம். குருவின் பலன் உள்ளதால் புத்திர பாக்கியம் கை கூடி வரும். தடைகள் தாண்டி முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக அமையும். கல்வி மேம்படும். புதிய முயற்சிகள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

தொழில் வியாபாரம், வணிகம் போன்றவற்றிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பண வரவுகள் அதிகரிக்கும். ஆனால் அதிகமாகவும், விரைவாகவும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களை சில தவறான செயல்களை செய்ய வைக்கும். இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நன்றாக இருக்கும். நீண்ட நாள் இருந்த உடல் உபாதைகள் நீங்கும். 

பரிகாரம் : ஹனுமன் பகவான் கோவிலுக்கு சென்று வரவும். வானரங்களுக்கு வாழைப்பழம் வழங்கவும். இவ்வாறு செய்தால் துன்பங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.