Header Ads Widget

<

செப்டம்பர் மாதம் கும்ப ராசிக்கு வரும் யோகம் - SEPTEMBER MONTH KUMBA RASI PALANGAL 2022

கும்பம் : கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் பயணங்களில் ஒவ்வொரு அடியும் நீங்கள் கவனமாக  எடுத்து வைக்க வேண்டும். புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களுக்கு செவ்வாயின் பார்வை சாதகமாக இருப்பதால் இருக்கும் நிலையிலிருந்து அப்படியே சென்று விடவும். குரு, சனி, புதன் வக்ர நிலையில் பயணம் செய்வதால் புதிய வண்டி வாகனம், திருமண முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. ஆனால் புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்ட முயற்சி செய்யலாம். ஏழரை சனி கொடுக்கும் படிப்பினைகளை ஏற்க தயாராக இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.

மாணவர்களுக்கு இது நல்ல மாதம் ஆகும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூரில் சென்று படிக்க வாய்ப்புகள் வரும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நிதானம் அவசியம். செலவுகள் அதிகரிக்கும் அதை சுப செலவுகளாக மாற்றி கொள்வது நல்லது. குடும்ப வாழ்க்கையை பொறுத்த வரை சில வாக்குவாதங்கள் வந்து போகும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக பேச வேண்டும். வாழ்க்கை துணையிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. காதல் கசக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை சில உடல் உபாதைகள் வரலாம். உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது  நல்லது. கால், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். இந்த மாதம் அதிக விழிப்புணர்வுடன் பாதுகாப்புடன் இருப்பது அவசியமாகும். 

வழிபடவேண்டிய தெய்வம் : சனி பகவான் 

பரிகாரம் : சனிக்கிழமைகளில் எள்ளு கலந்த தயிர் சாதத்தை காகத்துக்கு அளித்து வர தீமைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். 

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 24, 25, 26 ராசிக்கு வரும் யோகம்