Header Ads Widget

<

ஐப்பசி மாதம் கன்னி ராசிக்கு வரும் அற்புத யோகம் - AIPPASI MONTH KANNI RASI PALAN 2022



கன்னி : (KANNI) கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களின் ராசி நாதன் புதன் பகவானின் சாதகமான பார்வை உங்களுக்கு அனைத்து விதத்திலும் நன்மை அளிக்கும். உங்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குருபகவான் திருமண ஸ்தானத்தில் இருப்பதால் திருமண பாக்கியம் அமையும். பேசும் வார்த்தையில் கவனம் தேவை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. உடன் பிறப்புக்கள் மற்றும் பெற்றோர்களின் வழியில் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் ஆசை நிறைவேற்ற முடியும். சுப செலவுகள் ஏற்படும். புதிய பொருள்கள் வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு.

தொழில் துறையை பொறுத்தவரை செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. தொழில் ரீதியாக வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் வாய்ப்பு உண்டு. தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். செல்வநிலை நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்களிடையே அன்பு அதிகரிக்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில கோளாறுகள் வந்து போகும். சில நேரம் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உடல் நலனில் கவனம் தேவை.

பரிகாரம் : சிவபெருமான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வர கஷ்டங்கள் நீங்கும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 6, 7, 8