Header Ads Widget

<

ஜூலை மாதம் 2023 துலாம் ராசிக்கு வரப்போகும் ராஜயோகம் - JULY MONTH THULAM RASI PALAN IN TAMIL 2023



துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு 10ம் இடத்தில் சூரியன் மற்றும் புதன் கிரகங்களின் சஞ்சாரம் நல்ல யோகத்தை கொடுக்கப்போகிறது. இந்த கால கட்டத்தில் நிதிநிலை நன்றாக இருக்கும். பங்கு சந்தைகள் மற்றும் முதலீடுகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை, சம்பள உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். எந்த ஒரு வேலையும் திறம்பட செய்வீர்கள். சுறு சுறுப்புடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்கும். சிலர் தொழில் விரிவாக்கம் செய்யலாம். இந்த மாதம் உறவு விவகாரங்கள் மிதமானதாக இருக்கும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்ப விஷயத்தில் வாக்குவாதம் மற்றும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

வாழ்க்கை துணையின் கூட்டாளிகளின் மூலம் ஆதாயம் காணப்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடை தாமதமின்றி நடந்து முடியும்.சிலர் குடும்பத்துடன் நீண்ட பயணம் செய்யலாம். மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். போட்டி மற்றும் தேர்வுகளில்  வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டில் கல்வி கற்க விருப்பமுள்ளவர்கள் ஆசை நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த மாதம்  சுமாராக இருக்கும். டென்ஷன், மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். சிலருக்கு எதிர்காலம் பற்றிய கவலைகள் இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.