Header Ads Widget

<

வக்ர சனிப்பெயர்ச்சி 2023 துலாம் ராசிக்கு வரப்போகும் ராஜயோகம் | VAKRA SANI PEYARCHI THULAM RASI PALAN 2023 IN TAMIL



துலாம் : (LIBRA) துலாம் ராசி அன்பர்களே சனிபகவான் ஜூன் 17ம் தேதியிலிருந்து நவம்பர் 4ம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருக்க போகிறார். இந்த வக்ர சனியால் உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால், கடந்த காலங்களில் செய்த புண்ணியம், கர்மா உண்டான பலன்களை அனுபவிக்க நேரிடும். திடீரென்று அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பெற்றோர்கள் வழியில் பூர்வீக சொத்துக்கள்  வந்து சேரும்.  புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். இதுநாள் வரை தள்ளிப்போன சுப காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும். பணியிடத்தில் நன்மதிப்பு கூடும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்களின் திறமைகளை நிரூபித்து காட்டுவீர்கள். கருத்து வேறுபாட்டால் உங்களை விட்டு பிரிந்து போனவர்கள் ஒன்று சேருவார்கள். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சிலபேர் குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன் ஆகியவற்றை நல்ல முறையில் செய்து முடிப்பார்கள். உல்லாச பயணங்களால் மனதில் நிம்மதி ஏற்படும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரன் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். காதலிப்பவர்களுக்கு சிறந்த நேரமாகும், ஒரு சிலர் காதல் திருமணம் செய்வார்கள். குடும்பத்தில் சந்தோசம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களின் உழைப்பிற்கு ஏற்ற நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதரம் சிறப்பாக இருக்கும். பிறரிடம் வாங்கிய கடனை அடைப்பீர்கள். மாணவர்களுக்கு விரும்பிய இடத்தில் உயர்கல்வி பெற இடம் கிடைக்கும். படிப்பில் திறம்பட இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாள் இருந்த  உடல்  உபாதைகள் அகலும். ஆரோக்கியம் மேம்படும். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.