Header Ads Widget

<

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 யாருக்கு கிடைக்கும் யாருக்கு கிடைக்காது புதிய அறிவிப்பு | RATION CARD MAHALIR URIMAI THOGAI RS.1000 NEWS


குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை ஆட்சிக்கு வந்தால் செயல்படுவோம் என்று அறிவித்த திமுக தற்போது செயல்படுத்தவுள்ளது. இந்த உரிமைத்தொகை யார் யாருக்கு கிடைக்கும, யாருக்கு கிடைக்காது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது. 

கலைஞர் மகளிர் உரிமைத்  தொகை ரூ.1000 பெற தகுதிகள் என்ன 

* ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக குறிப்பிட்டுள்ள பெண், குடும்ப தலைவியாக கருதப்படுவார்.

* ஆண் குடும்ப தலைவராக குறிப்பிட்டிருந்தால், அவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.

* திருமணம் ஆகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் குடும்பத்தலைவிகளாக கருதப்படுவார்கள்.

* ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் அதில் யாராவது ஒருவரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

*எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அதே கடையில்தான் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

* பொருளாதார தகுதிக்கான தனியாக வருமான சான்று அல்லது நில ஆவணங்களை இணைக்க தேவையில்லை.

* ஆண்டுக்கு வீட்டு உபாயோகத்திற்கு 3600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

* ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

* மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். உச்சபட்ச வயது ஏதுமில்லை.

யாருக்கெல்லாம் உரிமைத்தொகை கிடைக்காது?

* 5 ஏக்கர் உள்ள குடும்ப தலைவிகள் 

* வருமானம் வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வரி செலுத்துவோர் 

* சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள்.

* பெண் எம்.எல்.ஏக்கள் எம்.பி.க்கள் பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது.

மேலும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு  உரிமைத்தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தேவையான ஆவணங்கள் 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கும் போது என்னென்ன ஆதாரங்கள் கொடுக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 

* குடும்ப அட்டை எண் 

* ஆதார் எண் 

* தொலைபேசி எண் 

* புகைப்படம் 

* வயது 

* மாவட்டம் 

* தொழில் 

* சொந்த வீடா வாடகை வீடா 

* நிலம் வைத்திருப்பவரா 

* வாகனம் வைத்து உள்ளாரா 

* வங்கி கணக்கு மற்றும்  உறுதிமொழி ஆகியவை வழங்க வேண்டும்.