ஜூலை மாதம் 17ம் தேதி 2023 ஆடி 1ம் தேதி அன்று சூரியன் மிதுன ராசியிலிருந்து சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே நேரத்தில் சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்கு சந்திரன் மாறுகிறார். இதனால் இந்த இரு கிரகங்களும் ராசிகளை பரிமாறி கொள்ளக்கூடிய பரிவர்த்தனை யோகம் உருவாக காரணமாகிறது. சந்திரனிலிருந்து மூன்றாவது, ஆறாவது, பத்தாம் மற்றும் 11ம் வீட்டில் அமைந்திருக்கும் கிரகங்களை சேர்ந்த ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன்களை தரப்போகிறார். இதில் எந்தந்த ராசிகள் அதிக பலன்களை பெறப்போகிறது என்பதை பார்ப்போம்.
மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே ஆடி மாதம் உங்களுக்கு சிறப்பான பலன்களை தரப்போகிறது. கடக ராசியிலிருந்து சூரியனின் சஞ்சாரம் செய்யக்கூடிய நிலையில், சூரியனின் ராசியான சிம்மத்தில் செவ்வாய் திருப்புமுனையாக அமையும். சூரியன், சந்திரன் பரிவர்த்தனை யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறார். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நற்பெயர், நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செய்யப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே ஆடி மாதம் உங்களுக்கு ராஜயோகத்தை தரப்போகிறது. சூரியன் சந்திரன் பரிவர்த்தனை யோகமும் மிகவும் அதிர்ஷ்டமான பலன்களை தரும். ஆடி மாதம் உங்கள் வாழ்வில் ஏற்றம் தரக்கூடியவையாக இருக்கும். தன ஸ்தானத்தில் சூரியனும், தைரிய ஸ்தானத்தில் சந்திரனும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு பலவிதத்தில் ஏற்றம் தரக்கூடியவையாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பணத்தை எதிர்கால தேவைக்காக சேமித்து வைப்பீர்கள். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே ஆடி மாதம் உங்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் தரக்கூடியவையாக அமையும். சுப பலன்களும் கிடைக்கும். இதுநாள் வரை இருந்த உடல் உபாதைகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதை உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மன கசப்புகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே ஆடி மாதம் உங்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறது. பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் புதிய உச்சத்தை அடைய வாய்ப்புகள் அதிகம். சமூகத்தில் உங்களின் கெளரவம் அதிகரிக்கும். ஆடி மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இதனால் பணிகள் எளிதாக முடிக்க முடியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே ஆடி மாதம் உங்களுக்கு சூரியனின் அமைப்பு மிக சாதகமான பலன்களை தரப்போகிறது. உங்களின் உடல் ஆரோக்கியம் ஆற்றல் மேம்படும். திருமண முயற்சிகளில் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமண வாழ்க்கையில் இன்பமான மாதமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.