Header Ads Widget

<

கனமழை எச்சரிக்கை இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிப்பு | TAMILNADU RAIN SCHOOL COLLEGE LEAVE HOLIDAY NEWS



மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் வெள்ளம்போல் காட்சியளிக்கின்றன. சூறை காற்றால் மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது அதன்படி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் இன்றும் நாளையும் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திரா கடலோர பகுதிகள், ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் நாளை  தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், கனமழையின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.