Header Ads Widget

<

சந்திரயான் 3 விண்கலம் தற்போதைய நிலை பிரக்யான் ரோவர் புதிய அப்டேட் - CHANDRAYAAN 3 PRAGYAN ROVER CURRENT SITUATION IN TAMIL

ரோவர் கண்டுபிடித்த நிலவின் பள்ளத்தாக்கு

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியதில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது சந்திரயான் 3 விண்கலத்தில் இறங்கிய பிரக்யான் ரோவர் பல அறிய தகவல்களை அனுப்பியுள்ளது. அதாவது நேற்று ரோவர் பயணித்த பாதையில் பெரிய பள்ளத்தை படம் பிடித்து இஸ்ரோ தரைக்கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்பியுள்ளது. பாதுகாப்பான இடத்தில இருந்து அந்த பள்ளத்தை கண்டுபிடித்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் பாதையை தற்போது மாற்றியமைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது பிரக்யான் ரோவர் புதிய பாதையில் சீராக பயணித்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரக்யான் ரோவர் மூலமாக நிலவில் மணற்பரப்பில் என்னென்ன தாதுக்கள் இருக்கின்றன, எத்தனை வகையான தாதுக்கள் இருக்கிறது என்பதை பற்றியும் மற்றும் கனிமங்கள் குறித்தும் இஸ்ரோவால் தெரிந்து கொள்ள முடியும். அந்த ரோவர் நிலவின் தரையை குடைந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும். அதன் மூலம் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் போன்ற என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்கும்.

பிரக்யான் ரோவர் கடந்து வந்த வழித்தடம் 

மேலும் நிலவின் மேற்பரப்பில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன என்று நிலவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும், லேண்டரும் அனுப்பியுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை ஒரு புதிய பரிணாமத்திற்கு கொண்டு செல்ல போவது உறுதியாகியுள்ளது.