Header Ads Widget

<

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு புதிய மாற்றம் கோடை விடுமுறை நீட்டிப்பு | TAMILNADU SCHOOL SUMMER HOLIDAY REOPENING NEWS 2024


தமிழகத்தில் பள்ளிகளுக்கு பொது தேர்வுகள் மற்றும் முழுஆண்டு தேர்வுகள் முடிவடையும் நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதில் புதிய மாற்றங்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து, 10ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது. 1ம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் 12ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் ஏப்ரல் 23ம் தேதி கடைசி தேர்வு முடிந்ததும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பட்டுள்ளது. அதன்படி 2 மாதம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கோடை விடுமுறைக்கு மாணவர்கள் தங்களது சொந்த ஊருகளுக்கு சென்று விடுமுறையை கொண்டாடி மகிழ்வார்கள். மேலும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவார்கள். தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான இடங்களுக்கு சென்று வருவார்கள். எனவே கோடை விடுமுறைக்காக சுற்றுலாத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் கூடுதல் பேருந்துகள் விடப்படும்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் மாணவர்களும் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கோடை விடுமுறைக்காக புனித ஸ்தலங்கள், மலை பிரதேசங்கள், கோவில்கள் ஆகிய இடங்களுக்கு செல்ல இப்போதே திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 4ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 6ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதன் பிறகுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் கோடை விடுமுறை நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பள்ளி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.