Header Ads Widget

<

சூரிய கிரகணம் செப்டம்பர் 21 2025 அன்று என்ன செய்ய வேண்டும்? இந்த ராசிகள் கவனமாக இருங்க!

சூரிய கிரகணம் என்றால் என்ன?
சந்திரன் பூமியையும், பூமி சூரியனை சுற்றி வரும் நிலையில், சூரியன் - பூமி இடையே ஒரே நேர் கோட்டில் சந்திரன் வரும் போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும் நிகழ்விற்கு சூரிய கிரகணம் (Solar Eclipse) என்று பெயர். 

கிரகணம் நிகழும் நேரம் மற்றும் எங்கெல்லாம் தெரியும்?
சூரிய கிரகணம் இந்திய நேரப்படி செப்டம்பர் 21-ஆம் தேதி இரவு 11:00 மணிக்கு தொடங்கி 22-ஆம் தேதி அதிகாலை 3.23 மணிக்கு முடிவடைகிறது.ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்டிகா, பசுபிக் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நாடுகளில் தெரியும்.
இந்த சூரிய கிரகணத்தின் பொது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான;
மேஷம், சிம்மம், கன்னி, தனுசு,  கும்பம், மீனம் ஆகிய ராசிகள் ஆகும். 
 
எளிய பரிகாரம் :
இந்த ராசிக்காரர்கள் கிரகண நேரத்தில் சூரியனுடைய மந்திரமான ஆதித்யஹ்ருதயம் மற்றும் சிவனுடைய தோத்திரங்கள் சிவபுராணம் ருத்ரம் ஆகியவை சொல்லலாம். முடியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லலாம். சூரிய கிரகணம் முடிந்ததும், தண்ணீரில் கல் உப்பு, மஞ்சள், மூன்று வேப்பிலை கலந்து குளிக்கவும்.  அதன் பிறகு அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வரவும்.



கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:
*கிரகணத்தின் போது நாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
*கிரகண சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் கத்தி, கத்தரிக்கோல் உள்ளிட்ட கூர்மையான பொருட்களை தொடவோ, கையில் வைத்திருக்கவோ கூடாது.
*கிரகண சமயத்தில் சண்டை, வாக்கு வாதம், அவதூறு சொற்களை தவிர்க்க வேண்டும்.
* கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
*கிரகணத்தை வெறும் கண்ணில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
*கிரகணம் நடக்கும் நேரத்தில் வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்க வேண்டும்.
*கிரகணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் சாப்பிட வேண்டும்.


கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:
*சூரிய கிரணத்தின் போது இறை வழிபாடு செய்ய மிக ஏற்ற நேரம் ஆகும். சூரியன் - பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் நமக்கு அமையக்கூடிய எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் ஒன்று கூடுவதற்கான நேரம் ஆகும். அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவதும், மந்திரங்களையும் உச்சரிப்பதும் சாதாரண நேரத்தில் கிடைக்கும் பலனை விட பல மடங்கு அதிகரிக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
*கிரகண நேரத்தில் உணவு    வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பைப் புல் போட்டு வைக்க வேண்டும்.
*கிரகணம் முடிந்த பின்னர் வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பிறகு கல் உப்பு போட்ட தண்ணீரில் குளித்து, சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி, இறைவனை வழிபட நன்மை உண்டாகும்.