நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தீபாவளி பண்டிகைக்காக இனிப்புகள், பலகாரங்கள், பட்டாசுகள், புத்தாடைகள், புதிய திரைப்படங்கள் என தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்தாண்டு தீபாவளி 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி அதாவது திங்கட்கிழமையில் வருவதால், தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை குறித்து தற்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சனி, ஞாயிறு விடுமுறையுடன் திங்கட்கிழமையிலும் விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்படும். தீபாவளி பண்டிகை காரணமாக மக்கள் பயணம் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை முடித்து எப்படி அதே நாளில் சொந்த ஊருக்கு திரும்புவது என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. அவர்கள் அடுத்து ஊர் திரும்ப வேண்டுமென்றால் திங்கட்கிழமை தீபாவளி அன்றே இரவு புறப்பட வேண்டும். இதனால், அனைவரும் ஒரே நாளில் கிளம்புவார்கள் என்பதால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
எனவே, தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 21-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், சனிக்கிழமைகளிலும் பலர் விடுமுறை எடுக்க வாய்ப்புள்ளது என்பதால் நான்கு நாள்கள் தொடர் விடுமுறையாக அது அமைந்துவிடும். மேலும், செவ்வாய்கிழமையில் விடுமுறை அறிவித்தால் ஏதாவது ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகவும் அரசு அறிவிக்கலாம். இதேபோல், பலமுறை பண்டிகை காலகட்டத்தில் மக்கள் கோரிக்கையை ஏற்று அரசும் ஒரு நாள் கூடுதல் விடுமுறை அறிவித்து உள்ளது. அதேபோல இந்த தீபாவளி பண்டிகைக்கும் தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.