Header Ads Widget

<

செப்டம்பர் மாதம் கடக ராசிக்கு வரப்போகும் யோகம் - SEPTEMBER MONTH RASI PALAN KADAGAM 2022


கடகம் :
கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன் சூரியனுடன் இணைகிறார். இந்து உங்களுக்கு புதுவித யோகத்தை தரப்போகிறது. உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. எந்த விதமான தடைகளும் இன்றி காரிய வெற்றி உண்டாகும். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் ஆதாயம் காண்பார்கள். கட்டிட துறையில் தொழில் செய்யும் ரியல் எஸ்டேட் செய்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். 
சனியின் பார்வையால் சில பிரச்சனைகள் இருந்தாலும், குருவின் பார்வையும் கிடைப்பதால் அற்புதங்கள் நிகழும். திருமண சுப காரியம் நன்றாக நடைபெறும்.  வரன் பார்ப்பவர்களுக்கு கைகூடி வரும். உங்களுக்கு குருவின் பலன் உள்ளதால் சுப காரியங்கள் நடைபெற உள்ளது.  காதலிப்பவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவுடன் திருமணம் கைகூடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். 

பெண்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வண்டி, வாகனம், வீடு வாங்கவும், புது வீடு மாறவும் வாய்ப்புகள் உண்டு. வருமானம் அதிகரிக்கும். இந்த மாதம் பிற்பகுதியில் சூரியன் புதனோடு இணைந்து புதாத்திய யோகம் பெறுகிறார். மாணவர்களுக்கு சிறப்பாக மாதம். வெளியூர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புகள் உண்டு.


உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சின்ன சின்ன உடல் கோளாறுகள் வந்து போகும். எனவே உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. உங்களுக்கு இந்த மாதம் அஜீரண கோளாறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். உங்கள் பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. செப்டம்பர் மாதம் உங்களுக்கு மனதில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் மாதமாக அமையும்.

பரிகாரம் : சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பாலபிஷேகம் செய்தால் துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.