Header Ads Widget

<

இன்றைய ராசி பலன் -15.02.2023 - INDRAIYA TODAY RASI PALAN 15.02.2023



மேஷம் : (MESHAM)  மேஷ ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் எதிலும் அவசரப்படக்கூடாது. எதிலும் பொறுமையாக இருப்பது உத்தமம். தொழிலில் முதலீடு விஷயத்தில் நன்கு ஆராய்ந்து முதலீடு செய்யவும். பணவரவு சுமாராக இருக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். காதலர்களுக்கு கலையான பலன்களை தரும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் கோபம் கொள்ளாமல் விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் அதிர்ஷ்ட எண் : 3

ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருந்தாலும், பணத்தை வீணாக செலவு செய்யாமல்  சேமித்து வைக்கவும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் நல்ல பரஸ்பரம் ஏற்படும். மற்றவர்களின் விவகாரங்களில் வீணாக தலையிடுவதை தவிர்க்கவும். காதல் கைகூடும். கணவன், மனைவி உறவு மேம்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு அதிர்ஷ்ட எண் : 1

மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உங்களின் முன்கோபம் சில பிரச்சனைகளை உண்டாக்கும். திருமண ஆகாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். வீடு மனை வாங்க யோகம் உண்டு. காதல் கைகூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. அதிர்ஷ்ட நிறம் : பச்சை அதிர்ஷ்ட எண் : 9

கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களின் புத்திசாலித்தனத்தால் புதியவற்றை எழுதில் கற்றுக் கொள்வீர்கள். பண தேவைப்பாடு அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். காதல் கைகூடும். வாழ்க்கை துணையின் அன்பு அதிகரிக்கும். இன்று கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வரும். உடல் நலனில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் : கருப்பு அதிர்ஷ்ட எண் : 6

சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே இன்றைய நாள் நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் திட்டங்கள் முடிவுக்கு வரும். பணவரவு ஓரளவு இருக்கும் ஆனால் செலவு அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் அதிர்ஷ்ட எண் : 4

கன்னி : (KANNI) கன்னி ராசி அன்பர்களே இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்காக நெருக்கமானவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பழைய நண்பர்களை நீண்ட நாள் கழித்து சந்திக்க கூடும். உங்களின் திறமைக்கேற்ற பரிசும் பாராட்டும் கிடைக்கும். ஆன்மீக வழிபாடு மேற்கொள்வீர்கள். உங்களின் ஆசை நிறைவேறும் நாள். வாகன பயணத்தின் போது வேகத்தை குறைக்கவும். அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண் : 7

துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களின் விருப்பத்தின் படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். உங்களின் சின்ன சின்ன முயற்சி பெரிய வெற்றியை கொடுக்கும். உங்களின் திறமைக்கேற்ற பரிசும் பாராட்டும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்களால் நல்ல அனுகூலம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். எந்த செயலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு அதிர்ஷ்ட எண் : 8

விருச்சிகம் : (VIRUCHIGAM) விருச்சிக ராசி அன்பர்களே இன்றைய நாள் நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். தொழில் சம்பந்தமான நீண்ட நாள் காத்துக்கொண்டிருந்த கடன் கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். உங்களின் தனிப்பட்ட ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் அதிர்ஷ்ட எண் : 1

தனுசு : (DHANUSU)  தனுசு ராசி அன்பர்களே இன்றைய நாள் நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் கவனமாக கையாள வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு உண்டு. கடன் சம்பந்தமான பிரச்சனை தீரும். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து விவகாரத்தில் போட்டிகள் நிறைந்து காணப்படும் அதிர்ஷ்ட நிறம் : மயில் பச்சை அதிர்ஷ்ட எண் : 3

மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே இன்றைய நாள் நீங்கள் எதை செய்தாலும் யோசித்து செய்வது நல்லது. பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் சந்தோசம் பெருகும். மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிலும் பொறுமை தேவை. அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அதிர்ஷ்ட எண் : 9

கும்பம் : (KUMBAM) கும்ப ராசி அன்பர்களே இன்றைய நாள் நீங்கள் உறுதியாகவும் உத்வேகத்துடனும் இருப்பீர்கள். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையை கூடும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த கால தாமதம் நீங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் :  ஊதா அதிர்ஷ்ட எண் : 4

மீனம் : (MEENAM) மீன ராசி அன்பர்களே இன்றைய நாள் ஆன்மீக வழிபாடு மன அமைதியை கொடுக்கும். எதிர்கால எண்ணங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். பணத்தை கையாள்வதில் எச்சரிக்கை தேவை. பணியிடத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. பெண்கள் மனதிற்கு பிடித்த பொருளை வாங்குவீர்கள் அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் அதிர்ஷ்ட எண் : 1