Header Ads Widget

<

உடல் எடையை குறைக்கும் 5 எளிய வழிமுறைகள் - UDAL EDAI KURAIYA TIPS WEIGHT LOSS TIPS IN TAMIL


நவீன காலத்தில் மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறையின் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. உடல் எடை அதிகரிப்பது போல உடல் எடையை குறைப்பது எளிதாகும். அதை பற்றி இங்கே பார்ப்போம்.

காலை உணவை தவிர்க்க வேண்டாம் 

சிலர் காலையில் சாப்பிட்டால் உடல் எடை அதிகமாகும் என கருதி சாப்பிடாமல் இருப்பார்கள். ஒரு சில பேர் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் காலை உணவை தவிர்க்கின்றனர். இந்த இரண்டுமே தவறாகும். காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. ஏனென்றால் இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் அதிக இடைவெளி இருப்பதால் காலை உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். காலை உணவை தவிர்த்தால் சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

தண்ணீர் 

உடல் எடையை குறைப்பதற்கு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அடுத்தாக நீர் ஆதாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களின் ஜூஸ், காய்கறி சூப் போன்றவை உடல் எடையை குறைக்க உதவும். 

உடற்பயிற்சி 

தினந்தோறும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது முக்கியமான ஒன்றாகும். அதிக எடை  கொண்டவர்கள் அதிகாலையில் நடைப் பயிற்சி செய்வது உடல்  எடையை குறைக்க மட்டுமில்லாது புத்துணர்ச்சியை கொடுக்கும்.

தூக்கம் 

மனிதனுக்கு தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் உண்ட உணவு செரிமானம் ஆவதற்கு இரவில் தூங்கும் போது உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உணவுகளை எளிதில் செரிக்கின்றன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் 7 முதல் 8 மணிவரை தூங்குவது அவசியம்.

தானியங்கள்

பச்சையாக முளை கட்டிய தானியங்களை உண்டு வந்தால் நாம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு படிமங்களை கரைப்பது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான புரத சத்தும் கிடைக்கும். வேகவைத்த முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து நார்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும். உணவில் சாதத்தை குறைத்து காய்கறிகளை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

சாப்பிடும் முறை 

உடல் எடையை குறைக்க என்னதான் டயட்டில் இருந்தாலும், சாப்பிடும் முறை ஒன்று இருக்கிறது. பல பேர் சாப்பிடும் போது அவரசரமாக வாயில் போட்டுகொண்டு விழுங்குகின்றனர். இப்படி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதோடு செரிமான கோளாறு மற்றும் பல நோய்களை வரவழைத்து விடும். நொறுங்க தின்றால் நூறு ஆயிசு என்பது பழமொழி  அதுபோல நாம் சாப்பிடும் போது எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் நன்றாக மென்று உமிழ்நீரில் கரையும்படி சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் உடல் பருமன் குறைவதோடு, ஆரோக்கியமாக வாழலாம்.