Header Ads Widget

<

ஜூன் மாதம் 2023 மேஷ ராசிக்கு வரப்போகும் அதிர்ஷ்ட யோகம் | JUNE MONTH RASI PALAN 2023 MESHAM IN TAMIL


மேஷம் : மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு இது நாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் நிறைவேறும். சனிபகவான் வக்ரம் அடைகிறார். சனிபகவான் சில நல்ல ஆதாய பலன்களை கொடுக்கப் போகிறார். இதுவரை நீங்கள் செய்த முயற்சிகளுக்கு தற்போது நல்ல பலன்களை கொடுக்கும். பெண்களுக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு. வீடு மாற்றம் செய்ய நினைப்பவர்கள் இந்த மாதத்தில் மாற்றி கொள்ளலாம். நண்பர்களிடம் பேசும் போது கவனமுடன் பேச வேண்டும் ஏனென்றால் தேவையற்ற குழப்பங்கள் உண்டு பண்ணலாம். கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். இந்த மாத பிற்பகுதியில் சனிபகவான் வக்கிர நிலையடைவதால், கால் மூட்டு சம்பந்தப்பட்ட  பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு தள்ளி போகலாம். பங்கு சந்தைகளில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு இந்த மாதம் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். இல்லதரசிகள் பொறுத்தவரை குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு வேலைகளை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை இந்த மாதம் அலைச்சல்கள் நிறைந்த மாதமாக இருப்பதால் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். சிலருக்கு செரிமான பிரச்சனைகள் வரலாம். ஆகவே உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு வாழ்வில் ஏற்றத்தை தரும்.

இவ்வளவு சீக்கிரம் உடல் எடை குறையும் அதிசயம்