தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்தனர். இதில் 1.06 கோடி பெண்கள் தகுதியானவர்களாக தமிழக அரசு அறிவித்தது. திட்டம் தொடங்கவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சோதனை முறையில், பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1 மற்றும் 10 பைசா அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திட்டம் தொடங்கவிருந்த முதல் நாளிலே பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் இந்த திட்டத்தில் விண்ணப்பித்த பல பேருக்கு இன்னும் உரிமை தொகை ரூ.1000 வரவில்லை. இதனால் இன்னும் தங்களுக்கு பணம் வரவில்லையே என்று மிகுந்த ஏமாற்றத்துடன் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்து இன்னும் ரூ.1000 மற்றும் எஸ்எம்எஸ் வராதவர்களுக்கு தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; வருகிற செப்டம்பர் 18ம் தேதி வரை பணம் அனுப்பும் பணியினை வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றும் அதற்குள் தேர்வு செய்யப்பட்ட மெசேஜ் அல்லது பணம் ஆகியவை வரும் என்றும், ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான SMS அனுப்பி வைக்கப்படும். நிராகரிக்கப்பட்டவர்கள் இ சேவை மையங்கள் மூலமாக மேல் முறையீடு செய்து பயன் பெறலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே பணம் வரவில்லை என்றும், எஸ் எம் எஸ் வரவில்லை என்று யாரும் கவலைப்படவேண்டாம் 18ம் தேதிவரை காத்திருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.