Header Ads Widget

<

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 அனைத்து ரேஷன் அட்டைக்கும் உண்டு தமிழக அரசு அறிவிப்பு | PONGAL PARISU 2024 RATION CARD RS.1000 NEWS



*தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2024ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் இன்று பொங்கல் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

*மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், மக்களின் கோரிக்கைகளை ஏற்று, நேற்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது, பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*பொங்கல் திருநாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவதற்கு இதற்கான டோக்கன்கள் நேற்றுவரை வழங்கப்பட்டன. ஜன.10 ஆம் தேதி முதல் ஜன.13 ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்; ஜன.13ம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற முடியாதவர்கள், ஜன.14ம் தேதி பெறலாம்.

*வருகிற சனிக்கிழமைக்குள் 13ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அளிக்க கூட்டுறவு-உணவுத்துறை தீர்மானித்துள்ளது. அதாவது இன்று தொடங்கி 4 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த மாதம் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த மாதம் ரூ.2000 கிடைத்துள்ளதால், பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.