Header Ads Widget

<

மேஷ ராசி பலன் பிப்ரவரி 2024 முதல் வரப்போகும் அதிர்ஷ்டம் | FEBRUARY MONTH MESHA RASI PALANGAL 2024 IN TAMIL

மேஷ ராசிக்காரர்கள் (ARIES HOROSCOPE) இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2024 என்னென்ன பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை இங்கு முழுமையாக காண்போம். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2024 பொறுத்தவரை உங்களுக்கு பல விஷயங்களில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். தடைபட்ட காரியங்கள் விரைவாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு சவாலையும் சமாளித்து எதிரிகளை வீழ்த்துவீர்கள். வேலை செய்கிற இடத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உரிய நேரத்தில் வேலையை முடித்து, உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சில நேரங்களில் கோபம் ஏற்பட சூழல் உருவாகலாம்.எதையும் அனுசரித்து செல்வது நல்லது.மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த  பிப்ரவரி மாதம் சூரியன் பத்தாம் வீட்டில் இருப்பதால் பல நன்மைகளை தருவார். அரசு சார்ந்த வேலையில் பணிபுரிபவர்களுக்கு நல்ல ஏற்றத்தை தரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.



 
இந்த பிப்ரவரி மாதம் சுக்கிரன் 9ஆம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரம் நிறைவாக இருக்கும். கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் அன்பு கரம் நீட்டுவார்கள், இதனால் உங்களுக்கு மனதில் மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் பெருகும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் காதல் கைகூடி வரும். சிலருக்கு திருமணம் செய்ய வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் இந்த மாதம் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். பெண்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்களை தரும். பெண்கள் மற்றவர்களிடம் பேசும் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சில உடல் உபாதைகள் வந்து போகும். பெரிய அளவில் ஏதும் பாதிப்பு இருக்காது. நல்ல சத்தான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.