Header Ads Widget

<

துலாம் ராசி மே மாதம் 2024 ராசி பலன் மகிழ்ச்சி பெருகும் | MAY MONTH THULAM RASI PALANGAL 2024 TAMIL



துலாம் : (THULAM) துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மே 2024 மாதம் உங்களின் வளர்ச்சிக்காக நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். புதிய இட மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற வாய்ப்புகள் உண்டாகும். இந்த இடமாற்றதின் மூலம் உங்களின் வருமானம், சேமிப்பு ஆகியவை உயரும். இந்த மாதம் குடும்ப நபர்களிடம் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். நண்பர்களிடம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இந்த மாதம் செலவுகள் அதிகரிக்கும். உங்களின் அன்புக்குரியவர்களின் காதல் மகிழ்ச்சியை தரும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். பிறருடன் பழக்க வழக்கங்களில் மேற்கொள்ளவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். மறைமுக எதிரிகள் மூலம் சில பிரச்சனைகள் வரலாம். இதனால் நீங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்த வேண்டும்.

துலாம் ராசிக்காரர்கள் உங்கள் வாழ்க்கை துணையின் பெயரில் பணத்தை சேமிக்கலாம். பிறரிடம் இருந்து சற்று விலகியே இருங்கள். ஏனென்றால் உங்களிடம் உள்ள பணத்தை பெற முயற்சி செய்வார்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இந்த மே மாதம் உங்களின் தொழில் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் நன்றாக இருக்கும். எதிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு இந்த மாதம் நினைத்த இடத்தில் உயர்படிப்பு மேற்கொள்ளலாம். தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள். பெண்களுக்கு இந்த மே மாதம் சாதகமாக இருக்கக்கூடும். குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த மாதம் நீண்ட நாள் இருந்த உடல் உபாதைகள் விலகும். உங்கள் ஆரோக்கியத்தை பரிசோதித்து உடல் நலனை பரிசோதனை செய்வது நல்லது. தியானம், யோகா, உடற்பயிற்சி மேற்கோளாவது உடல் நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.