மேஷம்: (MESHAM)
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் அவர்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இந்த மாதம் பணத்தை சம்பாதிப்பதில் கவனம் செலுத்துவதிலிருந்து விடுபட்டு வீடு குடும்பம் என்று கொஞ்சம் நேரம் செலவவழிப்பது நல்லது. உங்களின் வாழ்க்கை தரம் உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் வரலாம். அந்த நேரத்தில் அனுசரித்து அன்பு காட்ட வேண்டும். எந்த ஒரு செயலும் செய்யும் முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பொருளாதாரம் இந்த மாதம் சராசரியாக இருக்கும். சில நேரங்களில் மன அழுத்தம் உண்டாகலாம். அந்த நேரத்தில் வாழ்க்கை துணையிடம் அல்லது நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். குல தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
துலாம்: (THULAM)
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு கலவையான பலன்களையே தரும் அதாவது மாராகவே இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் சுயநலமாக நடந்து கொள்ளலாம். காதல் வாழ்க்கைப் பொறுத்தவரை, மனதில் ஒருவித பயம் இருக்கும். தொழில் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. தொழில் வளர்ச்சிக்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மனம் எப்போதும் ஒருவித அமைதியை இழந்து இருக்கும். அதனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். தேவையில்லாமல் எதையும் சிந்திக்க வேண்டாம். வாழ்க்கை துணை, குழந்தைகளுடன் அன்பாக இருங்கள். உங்களின் உணர்வுகளை கவனித்து சூழ்நிலைக்கேற்ப அவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆன்மிக தலங்களுக்கு சென்று வர மன பாரம் குறையும்.
மகரம் : (MAGARAM)
மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமான பலனைத் தரும். தவறான முடிவுகள் வாழ்நாள் முழுவதும் அவதிப்பட வைக்கும். அதனால் எந்த முடிவு எடுத்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுங்கள். இம்மாதத்தில் எந்த ஒரு விஷயங்களை கையாளும் போதும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் அலட்சியம் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளுக்கு உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் ஆரோக்கிய பிரச்சனைகள் மோசமாகும். பிறரிடம் பேசும் கவனமாக இருக்க வேண்டும். பணவரவு ஓரளவு இருக்கும். வீட்டில் வாழ்க்கை துணை, குழந்தைகளுடன் அன்பாக இருங்கள்தினசரி உடற்பயிற்சி, தியானம் செய்வது நல்லது.
கும்பம் : (KUMBAM)
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் பல சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். ஒரு விஷயத்திற்கு முடிவெடுக்கும் போது, அதை பகுத்தறிந்து பின் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். வருமானம் நன்றாக இருக்கும். எதையும் போட்டு சிந்திக்காமல் இருங்கள். பிறரிடம் வீண் வாதங்களை தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் மன உளைச்சல் இருக்கும். அந்த நேரத்தில் மனதிற்கு பிடித்த இசையை கேளுங்கள். அளவோடு பேசுங்கள். உடல்ஆரோக்கியத்தைப் புறக்கணித்தால், அதற்கான விளைவுகளை சந்திப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேணடும்.
மீனம் : (MEENAM)
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் காலமாகும். இந்த மாதத்தில் ஆசைகள் அதிகரிக்கும். அதிகப்படியான மன அழுத்தம் உங்கள் தொழில் வாழக்கையை மட்டுமன்றி, தனிப்பபட்ட வாக்கையிலும் பிரச்சனைகளைக் கொண்டு வரும். நிதி நிலை வலுவாக இருக்கும். வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் வாழ்க்கை துணை, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இம்மாதத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும், அதை நேர்மறையாக எடுத்து கொள்ளுங்கள். ஆன்மிக தலங்களுக்கு சென்று வர நன்மை உண்டாகும்.