*சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று உருவாகி உலகமெங்கிலும் பரவ தொடங்கியது. இந்த கொரோனா நோய் தொற்றால் கிட்டத்தட்ட கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி, மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது மக்கள் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், அமெரிக்காவின் தெற்கு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் தற்போதுள்ள சூழ்நிலையில் பருவகால மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே நோய் தொற்று அதிகமாக இருக்க கூடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் தங்களை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.
*இந்த நிலையில் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்து வருகிறது.இந்தியாவின் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் கோவை பெரு நகரங்களில் கொரோனா வைரஸால் சில பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது வரை 6 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இவை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும், ஆனால் கவனமுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோன அறிகுறிகளான காய்ச்சல். சுவாசிப்பதில் சிரமம், வாசனை தெரியாமல் இருப்பது. தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், உடல் வலி, வாந்தி போன்ற அறிகுறிகளாகும். எனவே பொதுமக்கள் கைகளை அடிக்கடி கழுவுதல், சானிடைசரை உபகோக்கப்படுத்துதல், மாஸ்க் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.