ரூ.500 நோட்டு உள்ளவர்களுக்கு மிக மிக முக்கியமான அறிவிப்பை மத்திய பத்திரிகை அலுவலகம் உண்மை சரிபார்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2016 நவம்பர் 8ஆம் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு புதிய ரூ.500 கொண்டு வரப்பட்டது. அதேபோல், ரூ.1,000 நோட்டுக்கு பதில் ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ரூ.2,000 நோட்டு மக்களிடம் புழக்கத்தில் இல்லை. அதை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில் தான், வரும் மார்ச் 31, 2026 ஆம் ஆண்டுக்குள் 90% சதவீத ஏடிஎம்கள் ரூ.500 நோட்டுகள் வழங்குவதை நிறுத்திவிடும் என்றும், இதில், 75% சதவீதம் பேர் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க மாட்டார்கள் தகவல் பரவி வருகிறது. மேலும், 500 ரூபாய் நோட்டுகளை இனி யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும், பொதுமக்கள் தங்களது உங்களிடம் இருக்கும் ரூ.500 நோட்டுகளை உடனே செலவழித்து விடுமாறும் சொல்லப்பட்டிருந்தது. அத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மட்டுமே இனி ஏடிஎம்களில் கிடைக்கும் என்றும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் (Press Information Bureau) உண்மை சரிபார்ப்பு பிரிவு இந்த தகவல் வதந்தி என்று கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி இது போல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை 500 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும் X தளப் பதிவில் கூறியுள்ளது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்று தெளிவுபடுத்தி இருக்கும் மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் இது போன்ற தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. மேலும் ரூ.500 நோட்டுகள் சட்டப்பூர்வமாக இருக்கும் என்றும், இது போல் வரும் தகவல்களை பகிர்வதற்கு முன்பாக எப்போதும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து செய்திகளை சரி பார்க்க வேண்டும் என்றும் மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள X தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் சோசியல் மீடியாவில் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுகளை படிப்படியாக குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மை சரிபார்ப்புப் பிரிவு தகவலை மறுத்திருந்தது. அது போல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என கூறியிருந்தது.