இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, புதிதாக ரூ.500 கொண்டு வரப்பட்டது. அதேபோல, 1000 ரூபாய் நோட்டுக்கு பதில் 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது. தற்போது 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை. இந்நிலையில், ரூபாய் நோட்டுகள் விஷயத்தில் ரிசர்வ் வங்கி புதிய மாற்றங்களை கொண்டுவரவுள்ளது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கைமாறுகின்றன. ஒரே நோட்டு பலரால் பயன்படுத்தப்படுவதால், காகித நோட்டுகள் சீக்கிரமே கிழிந்து, அழுக்காகிவிடுகின்றன. மேலும் கள்ளநோட்டுகள் அச்சிடப்படுகின்றன. இப்படி கிழிந்த நோட்டுகளை மீண்டும் மீண்டும் அச்சிடுவது அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெரும் செலவை ஏற்படுத்துகிறது. இதற்கு பிளாஸ்டிக் நோட்டுகள் ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது.
வங்கி நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் நோட்டுகள் சாதாரண காகித நோட்டுகளை விட சுமார் இரண்டரை மடங்கு அதிக காலம் உழைக்கும். தண்ணீர், ஈரம், தூசியால் இவை எளிதில் பாதிக்கப்படாது. மேலும், இந்த நோட்டுகளைப் போலியாகத் தயாரிப்பது மிகவும் கடினம். இந்தியாவில் கள்ள நோட்டுப் புழக்கம் அதிகமாக உள்ளதால், பிளாஸ்டிக் நோட்டுகள் சரியான தேர்வாக இருக்கும் என்பதால் ரூபாய் நோட்டுகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுடன் பயன்பாட்டில் இருக்கும். இதற்கான மூலப்பொருள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அச்சடிக்கும் பணிகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வியட்நாம், ருமேனியா உட்பட சுமார் 60 நாடுகள் பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால், உலகின் பிரபலமான கரன்சியான அமெரிக்க டாலர் இன்னும் முழுமையாக பிளாஸ்டிக் நோட்டுக்கு மாறவில்லை. அமெரிக்க நோட்டுகள் பருத்தி மற்றும் லினன் கலவையால் தயாரிக்கப்படுகின்றன. இதுகுறித்து ஆர்.பி.ஐ., கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில்; தற்போது இருக்கும் இந்த திட்டத்தின் படி, முதற்கட்டமாக தலா 100 கோடி நோட்டுகள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்படும். அதன்பிறகு முழுவதுமாக அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்படும். அதுவரை காகித ரூபாய் நோட்டுகள் எப்போதும் போல செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், இந்த பணிகள் முடிவடைந்தவுடன் விரைவில் இந்திய முழுவதும் பிளாஸ்டிக் நோட்டுகள் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
