Header Ads Widget

<

60 வயதிற்கு மேல் உள்ள மூத்தக்குடி மக்களுக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு

நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கென்று பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வங்கிகள், தபால் நிலையங்கள்,  ரேஷன் கடைகள், ரயில் பயணம், பேருந்து பயணம், கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்வதற்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஓய்வூதியம் சார்ந்த திட்டங்கள், சலுகைகள் வெளியிடப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் மத்திய மாநில அரசுகள் புதிய சலுகைகளை வெளியிட்டுள்ளது.

*மூத்த குடிமக்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள புதிய சலுகைகளை  தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் மூத்த குடிமக்கள் பயன்பெறுவர் என அரசு தெரிவித்துள்ளது. இதன்கீழ் முதியவர்கள், அவர்கள் விரும்பிய புனிதத் தலங்களுக்கு அரசு ஏற்பாட்டில் பயணம் செய்யலாம். குளிர்சாதன பயணம், தரமான தங்குமிடம் & உணவு வசதிகள் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


*சீனியர் சிட்டிசன் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலம் பேருந்து, ரெயில் போன்ற சேவைகளில், டிக்கெட்டுகளில் கட்டண தள்ளுபடியை பெறலாம். மேலும், சில விமான நிறுவனங்கள் விமானப் பயணத்தில் சிறப்புத் தள்ளுபடியை வழங்குகின்றன. அரசு மருத்துவமனைகளில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கவுண்டர்கள் உள்ளன. இந்த அட்டை இருந்தால் அங்கு அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், பல தனியார் மருத்துவமனைகளும் மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன. சில மாநிலங்களில் மருத்துவ பரிசோதனைகள், மானிய விலையில் மருந்துகள் மற்றும் மருத்துவச் சலுகைகள் மற்றும் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் அட்டையைச் சமர்ப்பிப்பதன் மூலம், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு தனிநபர் ஒரு நிதியாண்டில் ரூ. 3 லட்சம் வரை வருமான வரி விலக்கு வரம்பைப் பெறலாம். இந்த சீனியர் சிட்டிசன் கார்டுக்கு ஆன்லைன் அல்லது சமூக சேவை மையத்திற்கு (CSC) சென்று விண்ணப்பிக்கலாம்.

*தமிழகத்தில் புதிதாக முதியோர் இல்லங்கள் நிறுவப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  அதில்  நூலகம், யோகா, தியானம் & உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்கீழ் கிராமப் பஞ்சாயத்துகளுக்கே நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருந்துகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

*மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், புதிய மறு சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் முதியோர் உதவித்தொகை என்ற திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். இதனால் இதுவரையில் ரூ.1,000 பெற்று வந்த அவர்களுக்கு மாதா மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

*தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது தாயுமானவர் திட்டத்தை 60 வயது முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

*ரேஷன் கடைகளில் முதியோர்கள்  மற்றும் ஒரு சில பேருக்கு கைரேகை வைத்து பொருள்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு வயது முதிர்வு மற்றும் கைரேகை தேய்து போவதினால் இந்த பிரச்சனையை சந்திக்கின்றனர். இதனால் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் தாமதமும் சிரமமும் ஏற்படுகிறது. இதற்காக "பேஷியல் ரெககனைசேஷன்" எனப்படும் முக அங்கீகாரம் (Facial Recognition) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது ரேஷன் கடைகளில் இப்போதுள்ள பயோமெட்ரிக் முறைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி ரேஷன் கடைகளில் உள்ள கேமரா மூலம் பயனாளியின் முகத்தை ஸ்கேன் செய்தே அவரது விவரங்கள் துல்லியமாக உறுதி செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.