மேஷம் : (MEHSAM) மேஷ ராசிக்காரர்களே ஜூன் மாதம் 2024 ஆம் ஆண்டு உங்கள் ராசி பலன்கள் எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்தப் பதிவில் முழுமையாக காண்போம். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொழில் வாழ்க்கையின் படி சனி பகவான் மாதம் முழுவதும் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் இருப்பதால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அதுவே உங்களுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும். நீங்கள் பணி செய்யும் இடத்தில் உங்கள் கடின உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். இதன் காரணமாக பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஐந்தாம் வீட்டின் அதிபதியான சூரிய பகவான் குரு சுக்கிரன் புதன் ஆகிய கிரகங்களுடன் இருப்பதால் உங்களின் திறமை மேம்படும். அதே நேரத்தில் பிறரிடம் பேசும் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.
மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் கலை திறமைகளில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்களுக்கு உயர் படிப்பிற்காக விரும்பிய இடத்தில் உயர்கல்வி கிடைக்கும். இந்த மாதம் காதலிப்பவர்களுக்கு காதல் கைகூடும். நீண்ட நாளாக திருமணத்திற்காக வரம் பார்த்தவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் சந்தோசம் கிடைக்கும். இந்த ஜூன் மாதம் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்களை தரும். பொன் பொருள் ஆபரணம் வாங்கி மகிழ்வார்கள். ஜூன் மாதம் பெண்கள் மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் நடக்கும் விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மேஷ ராசி காரர்களுக்கு இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை கலவையான பலன்களையே தரும். ஆகையால் தினமும் உடற்பயிற்சி நடைப்பயிற்சி யோகா போன்றவற்றை செய்து வர உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். இதன் மூலம் மருத்துவ செலவை குறைக்கலாம்.