ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசிக்காரர்களே இந்த ஜூன் மாதம் 2024 ஆம் ஆண்டு உங்களுடைய ஜாதகப்படி எப்படி இருக்கும் என்பதை என்னென்ன பலன்களை பெறப் போகிறீர்கள் என்பதை இந்தப் பதிவில் காண்போம். ரிஷப ராசிக்கு இந்த ஜூன் மாதம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் இருப்பதால் நீங்கள் உங்கள் வேலையில் சிறந்த பணியாளராக இருப்பீர்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்கள் மேல் அதிகாரிகள் உங்களை கெட்ட எண்ணத்துடன் அணுகலாம். ஆகையால் அவர்களிடம் நீங்கள் சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். இந்த ஜூன் மாதம் வியாபாரம் செய்பவர்களுக்கு வெளிநாட்டு வியாபாரங்கள் மூலம் நல்ல அனுகூலங்களை பெறுவீர்கள். ரிஷப ராசிக்காரர்கள் உங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். யாரையும் கடிந்து கொள்ள வேண்டாம். நீங்கள் தேவையற்ற சச்சரவுகளில் இருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. ராசிக்கு பத்தாம் வீட்டில் அதிபதியான சூரிய பகவான் முதல் பாதியில் ஒன்றாம் வீட்டில் இருப்பதால் உங்களின் தாய் வீட்டில் ஆதிக்கம் செலுத்துவார்.
உங்களின் பெற்றோர்களின் பேச்சை நீங்கள் புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். இந்த ஜூன் மாதம் காதலிப்பவர்களுக்கு சில மனக்கசப்புகள் வரலாம். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். ஆகவே எதையுமே விட்டு கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகலாம். ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது உத்தமம். திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிறு தடைகள் வரலாம். ஆனால் நல்ல இடத்தில் நல்ல வரன் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த ஜூன் மாதம் சற்று கலவையான பலன்களையே தரும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரிஷப ராசி பெண்களுக்கு இந்த மாதம் சிறு தடைகள் இருந்தாலும் உங்களின் கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சிறப்பாக கையாளுவீர்கள். இந்த மாதம் உங்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உடல் உபாதைகள் ஏற்படலாம். ஆனால் பெரிய அளவில் ஒன்றும் இருக்காது. தினசரி தியானம் செய்வது உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.
பரிஹாரம் : வெள்ளி கிழமைகளில் மஹாலக்ஷ்மியை வணங்கி வர கஷ்டங்கள் தீரும்.