நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் 60 வயது மேற்பட்ட மூத்தகுடி மக்களுக்கு (SENIOR CITIZEN) பல சலுகைகளை வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் ரயில் பயணம், பேருந்து பயணம், அஞ்சல் துறை, வங்கிகள், ரேஷன் கடைகள், ஓய்வூதியம் போன்றவற்றிக்கு சிறப்பு சலுகைகள் அவர்களுக்கு தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்வதற்கும் சிறப்பு சலுகைகள் அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் தற்போது முக்கியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு, 'மொபைல் செயலி' (SENIOR CITIZEN APP) மற்றும் தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம், இந்த செயலியை தங்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் (SENIOR CITIZEN APP) மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளது. அதில் அருகில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில அரசு திட்டங்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், அதிகாரிகள் விபரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மருத்துவமனை விபரங்கள் மற்றும் அவர்களின் குறைகளை தெரிவிக்கவும், மூத்த குடிமக்கள் MOBILE APP வழிவகை செய்யப்பட்டுள்ளது.