தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி 2026 ஆண்டுக்கான குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் விரைவில் வரப்போகிறது. நகைக்கடன் தள்ளுபடி ஆகப்போகிறது என்ற நம்பிக்கையில் வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு முக்கியமான மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 முதல் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
வங்கியில் தனிநபர் கடன், தொழில் கடன், கல்விக்கடன், சொத்து மீதான அடமானக் கடன், வாகனக் கடன், தங்க நகைக்கடன் மற்றும் பல்வேறு பெயர்களில் கடன் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் அவசர தேவைக்கு மிகச்சிறந்தது தங்க நகைக் கடன் தான். காரணம், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன் போன்ற சில கடன்களைப் பெற வேண்டுமானால், அதற்கு சில ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனால் கடன் கிடைக்க சற்று தாமதமாகும். ஆனால், தங்க நகைக்கடனை வாங்குவது மிக எளிது. ஒரு நாளிலேயே கடன் கிடைத்துவிடும். தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கு வெகு விரைவாகவும், எளிதாகவும் கடன் வழங்கப்படுகிறது. மற்ற கடன்களை விடவும் தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாகும். மேலும் தேர்தல் நேரங்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றில், தங்க நகை அடமானம் பேரில், நகைக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ஒவ்வொரு தேர்தலின் போதும், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வாக்குறுதியாக அளிக்கப்பட்டு வருவது, நகைக்கடன் உள்ளவர்களுக்கு பேருதவியாக அமைந்து வருகிறது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை வெளியிடுவார்கள் என்பதால், பொதுமக்கள் இப்போதே கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று நகைக்கடன் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 2021 போலவே 2026 தேர்தலிலும் பெண்களின் வாக்குகளை குறிவைத்தே திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கிறது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டுறவு சங்க நகைக்கடன் 3 முதல் 5 சவரன் வரை தள்ளுபடி அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
