Header Ads Widget

<

60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களுக்கு ரேஷன் கடைகளில் புதிய சலுகை வெளியான மகிழ்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ்  குடும்ப   அட்டைதரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக  அரிசி இலவசமாகவும் துவரம் பருப்பு, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தாயுமானவர் திடத்தின் கீழ் வயதான முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ரேஷன் கார்டு அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்ப தலைவிகள் வங்கி கணக்கில் மாதம்  ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில்  தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு தொடர்பான குறைகளைத் தீர்க்க, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை வட்ட அளவிலான மக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம்முகாம்களில் பெயர் சேர்த்தல்/நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மூத்தகுடிமக்களுக்கான அங்கீகார சான்று, ரேஷன் அட்டை திருத்தங்கள், நியாய விலைக் கடை தொடர்பான  புகார்கள், போன்றவற்றை பொதுமக்கள் நேரடியாகச் சென்று ஒரே நாளில் தீர்வு பெறலாம். ரேஷன் கார்டு குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறும். சென்னை போன்ற நகரங்களில் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், பிற மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும் முகாம்களில் மனு அளிக்கலாம்.  மேலும்,  1800 425 5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ரேஷன் கார்டு தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெறலாம்.

மேலும் "மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும்போது, கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைகளில் வழங்க இயலாத நிலையில், பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பொருட்களை வழங்க வேண்டும்' என, ரேஷன் ஊழியர்களுக்கு, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, 'வீடு தேடி பொருட்கள் வினியோகம் செய்யும்போது, கைரேகை சரிபார்ப்பு முறை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத நிலையில், பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பொருட்களை வழங்க வேண்டும்' என, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, தமிழக உணவு வழங்கல் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.