தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தற்போது முக்கியமான மகிழ்ச்சியான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழக மக்களின் அவர்களது வங்கி கணக்கில் ரூ.10000 வழங்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் என பல்வேறு கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழக வாக்காளர்களை கவரும் வகையில் இலவச பொருள்கள் மற்றும் உதவித்தொகையை அறிவித்து வருகின்றனர். சமீபத்தில் திமுக அரசு இல்லத்தரசிகளுக்கு பிரிட்ஜ், மிக்ஸி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.8000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது பாஜக அரசு தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அவர்களது வங்கி கணக்கில் ரூ.10000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி வெளியான அறிவிப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவி வழங்கப்படும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும். இதனால் பெண்களின் வாழ்க்கை தரம் உயரும்.
*ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.
*மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்குவதற்குத் தகுதியுள்ள பெண்களுக்கு ₹25,000 மானியம் வழங்கப்படும்.
*பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். மேலும், அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயமாக்கப்படும்.
*முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிக்கப்படும்.
*திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யப்படும்.
*முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ₹15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி (GST) தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
