Header Ads Widget

<

மே மாதம் ராசி பலன்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும்

மேஷம் ராசி (MESHAM RASI) : மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் அதிர்ஷ்டம் தரக்கூடிய மாதமாக அமையும். மேஷ ராசிக்காரர்களே இந்த மே மாதம் உங்களுக்கு மிகப்பெரிய நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த மே மாதத்தில் செவ்வாய் மாற்றம் பதினொன்றம் தேதி நடைபெறுகிறது. இந்த தினத்தில் உங்கள் ராசியிலேயே செவ்வாய் பகவான் வந்து அமர்வதால் நல்ல உற்சாகம் உண்டாகும். நல்ல பலன்கள்  பெறுவீர்கள். எல்லா விஷயங்களிலும் வெற்றிகள், முன்னேற்றம் ஏற்படும். இரண்டாம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் தன வரவு நன்றாக இருக்கும். செவ்வாய், சனி, புதன் 12 ஆம் இடத்தில் இருப்பதால் முதல் பத்து நாட்கள் செலவுகள், வீண் விரையங்கள் போன்ற அமைப்புகள் இருந்தாலும் பிற்பகுதி 20 நாட்கள் அற்புதமாக இருக்கும். சிலருக்கு குடும்பம் அமையும். விரும்பும் நபரை மணக்கும் வாய்ப்பு ஏற்படும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும்.



பிள்ளைகளாக இருந்து வந்த பிரச்சனைகள் மாறும். அவர்களுடைய திருமணம், வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல அனுகூலங்கள் காணப்படும். அற்புதமான பாக்கியங்கள் கிடைக்கும். கடன் தீரக்கூடிய அமைப்பு உள்ளது. கடனை அடைக்கும் வகையில் நல்ல வருமானங்கள் கிடைக்கும். தொழில் முனைவோருக்கு மே மாதம் 11-ஆம் தேதிக்குப் பிறகு பலன்கள் கிடைக்கும். வியாபாரிகள், விவசாயிகளுக்கு லாபகரமான மாதமாக இருக்கும். நம்பிக்கை ஏற்படும். மே மாதம் 11 ஆம் தேதி நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக 45 நாட்களுக்கு செவ்வாய் இருப்பதால் நல்ல மேன்மைகள் ஏற்படும். மே மாதம் முதல் 6 மாதத்திற்கு படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். ஆண், பெண் இருபாலருக்கும், நடுத்தர வயது பெண்மணிகளுக்கும் கவலைகள், பரிபூரணமாக நீங்கும். யோகத்தை தரும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். பணவரவு நன்றாக இருக்கும், குழந்தைகள் விஷயத்தில் ஏற்றம், கடன் தீர்வது என அனைத்து விதமான நல்ல முன்னேற்றங்களும் ஏற்படும். ஆகவே இந்த மே மாதம் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக அமையும்.