தமிழக அரசின் இலவச வீடு திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், மத்திய மாநில அரசுகள் இலவசமாக வீடு, மனை மற்றும் பட்டா வழங்கி வருகிறது. இத்திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகளோ அல்லது நிதி உதவியோ வழங்கப்படுகிறது.
1. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY - அனைவருக்கும் வீடு)திட்டம்:
கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்ட மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.
பயன்கள்: ரூ.1.5 இலட்சம் முதல் ரூ.2.5 இலட்சம் வரையிலான நிதி உதவி மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம் (CLSS) வழங்கப்படுகிறது.
தகுதி: சொந்தமாக வீடு இல்லாத ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் குறிப்பிட்ட வருமான வரம்பிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. கலைஞரின் கனவு இல்லம் (தமிழ்நாடு அரசு)திட்டம்: தமிழ்நாட்டில் சொந்தமாக வீடு மற்றும் வீட்டுமனை இல்லாத கிராமப்புற மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் திட்டம் ஆகும்.
பயன்கள்: ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.3.50 இலட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகத் தொகை செலுத்தப்படும்.மனை இல்லாதவர்கள்: சொந்த வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனையும் வழங்கப்படும்.
3. முதலமைச்சரின் சூரியசக்தி பசுமை வீடு திட்டம்: தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும்.
பயன்கள் : இலவசமாக 300 சதுர அடியில் கான்கிரீட் வீடு மற்றும் சூரியசக்தி மின்சாரம் அமைத்துத் தரப்படும்.
விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள்:ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானச் சான்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் தேவையான ஆவணங்கள் ஆகும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
கிராமப்புறங்களில் உள்ளவர்கள் : உங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்தை (Block Development Office) அணுகலாம். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள்: உங்கள் மாநகராட்சி, நகராட்சி அலுவலகம் அல்லது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.வீடு வாங்கும் அல்லது கட்டும் திட்டங்களுக்குத் தகுதியான வங்கிகளில் வீட்டுக் கடன்களும் எளிதாகக் கிடைக்கின்றன.
