Header Ads Widget

<

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரப்போகும் உதவித்தொகை ஜாக்பாட் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ்  குடும்ப  அட்டைதரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக  அரிசி இலவசமாகவும் துவரம் பருப்பு, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தாயுமானவர் திடத்தின் கீழ் வயதான முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ரேஷன் கார்டு அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்ப தலைவிகள் வங்கி கணக்கில் மாதம்  ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பண்டிகைக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவெக அரசு தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. தற்போது மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், புதிய மறு சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் முதியோர் உதவித்தொகை என்ற திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். இதனால் இதுவரையில் ரூ.1,000 பெற்று வந்த அவர்களுக்கு மாதா மாதம் ரூ.3,000 வழங்கப்படும். அதற்கான கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் 21 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 2500 ரூபாயும், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 3000 ரூபாயும் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


புதிய ரேஷன் கார்டுகள் 

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 46,000 ரேஷன் அட்டைகள் விநியோகத்திற்கு தயாராக உள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி முதல் 2,25,000 புதிய ரேஷன் அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக 46,000 அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.அந்தவகையில் அடுத்த சில நாட்களில் புதிய ரேஷன் அட்டை விநியோகம் தொடங்கப்படும் எனவும் முதலமைச்சர் இந்த விநியோகத்தை தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தகுதியான அனைவருக்கும் படிப்படியாக ரேஷன் அட்டை வழங்கப்படும் எனவும் உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.